Homeசெய்திகள்சினிமாசோபா சிறுவனுடன் குதூகலித்த எல்.ஐ.சி. படக்குழு

சோபா சிறுவனுடன் குதூகலித்த எல்.ஐ.சி. படக்குழு

-

- Advertisement -
பிரபல சோபா சிறுவனுடன் எல்.ஐ.சி. படக்குழுவினர் குதூகலமாக நகைச்சுவை செய்த காணொலி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவரும் ஆவார். தமிழில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த விக்கி, அடுத்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கோலிவுட் திரையில் இன்று வரை பேசப்படும் முக்கிய படமாகும். காதல், காமெடி, பாடல்கள் என நானும் ரவுடி தான் திரைப்படம் ஒரு பெரிய ஹிட் அடித்தது.

இப்படத்தின் மூலம் காதலிக்க தொடங்கிய விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் முடித்துக் கொண்டனர். இதையடுத்து, காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கினார். இதில், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு எல்.ஐ.சி. என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும், தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது திருமூர்த்தி மலையில், படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தில் பிரபல சோபா சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அச்சிறுவன் சோபா விற்பது போல, நடிகர், நடிகை மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை வசனம் பேசி விற்க முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. படக்குழுவினர் அனைவரும் அச்சிறுவனுடன் சேர்ந்து குதூகலித்த காணொலி வைரலாகி வருகிறது.

MUST READ