- Advertisement -
பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பலரும் வருகை தந்து வெற்றி பெற்று வருகின்றனர். சிவகார்த்திகேயன், புகழ் உள்பட பலர் சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் கவினும் இணைந்துள்ளார். லிப்ட் படத்தின் மூலம் அறிமுகமான கவின், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அடுத்து அவரது நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் டாடா. இப்படத்தில் கவினுடன் அபர்ணா தாஸ் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.


இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் எழுதி இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கே எழிலரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.



