Homeசெய்திகள்சினிமாஊர்வசி நடிப்பில் ஜெ பேபி... புதிய பாடல் அப்டேட் ரிலீஸ்...

ஊர்வசி நடிப்பில் ஜெ பேபி… புதிய பாடல் அப்டேட் ரிலீஸ்…

-

- Advertisement -
ஊர்வசி மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெ பேபி படத்திலிருந்து புதிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ஊர்வசி. 1980 காலகட்டங்களில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்வசி. பாரதிராஜாவின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் நகைச்சுவையான நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. நூற்றுக்கணக்கில் பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் ஊர்வசி. அடுத்தடுத்து நூற்றுக்கணக்கில் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் ஊர்வசி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஊர்வசியின் 700 ஆவது படமான அப்பத்தா திரைப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது ஊர்வதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ஜெ.பேபி. பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்து உள்ளார். சுரேஷ் மாரி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஊர்வசி, மாறன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி வரும் 22-ம் தேதி புதிய பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ