Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸின் அடுத்த படம் இதுதான்..... இயக்குனர் யார் தெரியுமா?

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் இதுதான்….. இயக்குனர் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.ராகவா லாரன்ஸின் அடுத்த படம் இதுதான்..... இயக்குனர் யார் தெரியுமா? அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்திலும், அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் கோல்ட் மைன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமிட் செய்யப்பட்டிருந்தார். எனவே இந்தப் படம் தான் ராகவா லாரன்ஸின் அடுத்த படம் என்று சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸின் அடுத்த படம் இதுதான்..... இயக்குனர் யார் தெரியுமா?இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படத்தின் இயக்குனர், வெங்கட் மோகன் தான் இந்த படத்தை இயக்க இருக்கிறாராம். அயோக்யா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் வெங்கட் மோகனின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் இந்த படத்திற்கு பிறகு தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

MUST READ