- Advertisement -
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை அஞ்சலி. ராம் இயக்கி கற்றது தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகியவர் நடிகை அஞ்சலி. அடுத்து, வசந்த பாலன் இயக்கி வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், நடிகை அஞ்சலியை முன்னணி நடிகையாகவும் கோலிவுட் திரையுலகில் உயர்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயும் எப்போதும்,அஜித் நடித்த மங்காத்தா, ஆகிய பட படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.




