spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிப்ரவரி 3 ஆம் தேதி 7 தமிழ் படங்கள் வெளியீடு!

பிப்ரவரி 3 ஆம் தேதி 7 தமிழ் படங்கள் வெளியீடு!

-

- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகும் 7 தமிழ் திரைப்படங்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில்  சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மைக்கேல் திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது.

we-r-hiring

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்‘ பட இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான மைக்கேல் பான் இந்தியா மூவியாக திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

2021-ல் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதே பெயரில் உருவாகி உள்ள இந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வெளிவர உள்ளது.

ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ரன் பேபி ரன் திரைப்படமும், பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி படமும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது.

Home

அதுமட்டுமில்லாமல் சமுத்திரகனி, கதிர் நடிப்பில் உருவான தலைக்கூத்தல், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை மற்றும் குற்றப்பின்னணி என 7 தமிழ் திரைப்படங்கள் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வருகின்றன.

MUST READ