spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி கணக்கை தொடங்கப்போவது யார்? - ஐதராபாத்vsமும்பை அணிகள் இன்று மோதல்!

வெற்றி கணக்கை தொடங்கப்போவது யார்? – ஐதராபாத்vsமும்பை அணிகள் இன்று மோதல்!

-

- Advertisement -

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் ஐதராபாத்vsமும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

we-r-hiring

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 8வது லீக் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு ஐதராபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐதராபாத் அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. மும்பை அணியை பொறுத்தவரையில் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 12 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தங்களுடைய முதலாவது வெற்றியை பெற மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது.

 

MUST READ