Homeசெய்திகள்சினிமாதனுஷ் - ராஷ்மிகா நடிக்கும் குபேரா... படப்பிடிப்பு வீடியோ வைரல்...

தனுஷ் – ராஷ்மிகா நடிக்கும் குபேரா… படப்பிடிப்பு வீடியோ வைரல்…

-

- Advertisement -
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் குபேரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக நடித்து வருபவர் தனுஷ். இந்தியில், ராஞ்சனா மற்றும் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.

இறுதியாக அவரது நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படம் தான் குபேரா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

அண்மையில் இப்படத்தின் தலைப்புக்கு சிக்கலும் ஏற்பட்டது. இந்நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MUST READ