- Advertisement -
மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை மாளவிகா மோகனன், தனக்கு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அதிரடியாக உருவான மாஸ்டர் படத்தில் மாளவிகா நடித்திருந்தார்.


இப்படத்தின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமும் அடைந்தார். பின்னர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போதுஇவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இதில் பசுபதி, பார்வதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.



