Homeசெய்திகள்சினிமாயாருக்கும் நிரூபிக்க அவசியமில்லை... நடிகை சமந்தா பதிலடி...

யாருக்கும் நிரூபிக்க அவசியமில்லை… நடிகை சமந்தா பதிலடி…

-

- Advertisement -
தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி அவருக்கு நிஜ வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. நாள்தோறும் பல்வேறு சிக்கல்களையும், சர்ச்சைகளும் சமாளித்து வருகிறார். பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது சிட்டாடெல் இந்தியா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இதனிடையே உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நடிப்பில் கவனத்தை குறைத்துவிட்டு, சிகிச்சை, சுற்றுலா, உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா ஆடையில்லாத புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட அவர் உடனடியாக அதை நீக்கியும் உள்ளார். குளியல் தொட்டியில் இருந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டு பின்னர் அதை பார்த்த சமந்தா சமூக வலைதளத்திலிருந்து நீக்கி இருக்கிறார்.

சமந்தா இப்படி மாறி விட்டாரே, இதை கொஞ்சும் கூட எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால், இறுதியில் அது சமந்தா இல்லை, அது மார்பிக் புகைப்படம் என்றும் சிலர் சமந்தாவுக்கு ஆதரவாக பதிவிட்டனர். இந்நிலையில், நடிகை சமந்தா இந்த பதிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

MUST READ