- Advertisement -
தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து விஜய் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.


தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. லிகர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரித்து இருந்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பேமிலி ஸ்டார் வெளியானது.

