spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் - ராஷ்மிகா கூட்டணியில் குபேரா... அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ...

தனுஷ் – ராஷ்மிகா கூட்டணியில் குபேரா… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ…

-

- Advertisement -
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் குபேரா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் வாரம் 3-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இந்தியிலும் அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ஏற்கனவே இந்தியில் அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

we-r-hiring
இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தனுஷ் நடிக்கும் 51-வது படமாகும். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வெளியாகிறது. கடந்த 2021-ம் ஆண்டு படம் அறிவிக்கப்பட்டு அண்மையில் தான் படப்பிடிப்பு தொடங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, குபேரா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் வாரம் 3-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ