spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா... டிரைலர் வெளியீடு...

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா… டிரைலர் வெளியீடு…

-

- Advertisement -
விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகி இருக்கும் மகாராஜா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

we-r-hiring
விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியானது. தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே, விஜய் சேதுபதி தனது 50-வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு மகாராஜா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை, குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அம்மு அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ