- Advertisement -
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை இயக்கி ஆதிக் ரவிச்சந்திரன் தான் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தெலுங்கில் டாப் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.




