- Advertisement -
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கினார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இது ரஜினியின் 171-வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. வேட்டையன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ரஜினியுடன் சேர்ந்து, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் பிரபல மலையாள நடிகர் திலீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.




