- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைத்து அண்மையில் டைட்டிள் டீசரையும் படக்குழு வெளியிட்டது. ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைக்கிறார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவடைந்தது.




