தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். மேலும் கிரண் கௌசிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தது இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ஜனவரி 1ஆம் தேதி மாலை 5 மணி அளவில் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.