spot_imgspot_img
HomeBreaking Newsமுனிஸ்காந்த் நடித்துள்ள 'மிடில் கிளாஸ்'.... கவனம் ஈர்க்கும் டிரைலர்!

முனிஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’…. கவனம் ஈர்க்கும் டிரைலர்!

-

- Advertisement -

முனிஸ்காந்த் நடித்துள்ள மிடில் கிளாஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முனிஸ்காந்த் நடித்துள்ள 'மிடில் கிளாஸ்'.... கவனம் ஈர்க்கும் டிரைலர்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் முனிஸ்காந்த். அந்த வகையில் இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு மிடில் கிளாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முனிஸ்காந்துடன் இணைந்து விஜயலட்சுமி, குரேஷி, காளி வெங்கட், ராதாரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேலராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியிருக்கும் இந்த படத்தை தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பிரணவ் முனிராஜ் இதன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஷான் லோகேஷ் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.

we-r-hiring

இந்த படமானது மிடில் கிளாஸ் குடும்பத்தில் வசிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து காமெடி – எமோஷனல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இப்படமானது வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

MUST READ