STR 49 படத்தின் வேற லெவல் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு அடுத்ததாக தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் 2025 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி இப்படமானது கல்லூரி சம்பந்தமான கதைக்களம் என்றும் அதில் நடிகர் சிம்பு ரௌடி மாணவனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படத்தில் நடிகை கயடு.லோஹர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் சந்தானம், STR 49 படத்தில் இணைந்திருப்பதை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.
அதாவது சிம்பு – சந்தானம் கூட்டணி வல்லவன், சிலம்பாட்டம், வாலு, வானம் ஆகிய பல படங்களில் இணைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி STR 49 படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், சிம்புவிற்காக மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளாராம். இது தவிர சந்தானத்தின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.