spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'கனிமா' பாடலை தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகும் 'தக் லைஃப்' பட பாடல்!

‘கனிமா’ பாடலை தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகும் ‘தக் லைஃப்’ பட பாடல்!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.'கனிமா' பாடலை தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகும் 'தக் லைஃப்' பட பாடல்!

நடிகர் கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், அடுத்தது தக் லைஃப் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கமல் தவிர சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லக்ஷ்மி, கௌதம் ராம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே ஆக்சன் கலந்த கதைக்களத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

we-r-hiring

இந்த பாடலுக்கு கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடனமாடியுள்ளனர். இந்த பாடல் திருமண கொண்டாட்ட பாடலாக வெளிவந்துள்ளது. கமல்ஹானின் வரியில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலை வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்கே ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திலிருந்து வெளியான கனிமா பாடலை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கியது போல் இந்த பாடலையும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

MUST READ