spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநீ இந்துவா?  சைவமா? ஆதீன மடத்தை வைத்து என்ன கிழிச்சீங்க? விளாசும் பழ.கருப்பையா!

நீ இந்துவா?  சைவமா? ஆதீன மடத்தை வைத்து என்ன கிழிச்சீங்க? விளாசும் பழ.கருப்பையா!

-

- Advertisement -

மடாதிபதிகள் பல்லக்கில் ஏற ஆசைப்படுகிறார்களே தவிர, சைவத்தை பல்லக்கில் ஏற்ற ஆசைப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.

 

we-r-hiring

தமிழ்நாடு அரசு மீது மதுரை ஆதீனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரை ஆதீனம் எப்போது பார்த்தாலும் தன்னை கொல்ல சதி நடக்கிறது. மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று சொல்வார். ஒருவரும் வாடகையை, குத்தகையை தர மறுக்கிறார்கள். அரசாங்கம் நுழைந்து அவர்களிடம் இருந்து நிலங்களை எல்லாம் பறித்து தரக்கூடாதா? அவர்களின் வீடுகளில் இருக்கும் மூட்டைகளை எல்லாம் கொண்டுவந்து எங்கள் மடத்தில் வைக்கக்கூடாதா?. இதை எல்லாம் செய்யாமல் எதற்கு அரசு இருக்கிறது என்று சொல்கிறார். இவ்வளவு பெரிய சொத்தை சுற்றி அவர் ஒருவரே குத்த வைத்துக் கொண்டிருக்கிறார்.

மடங்கள் என்றைக்கு சொத்துக்குரிய நிறுவனங்களாக மாறியதோ அன்றைக்கு அந்த மடங்களும் நாசமாகிவிடும். அந்த மதமும் நாசமாகிவிடும். பவுத்த மதத்தை பார்த்து தான் சைவம் மடங்களை கட்டிக் கொண்டது. சங்கம் சரணம் கச்சாமி என்று பவுத்தத்தில் சொல்வார்கள். சங்கம் என்று அதை நிறுவனப்படுத்தி, மடங்களை ஏற்படுத்துகிற போக்கு பவுத்தத்தில் இருந்துதான் பிறருக்கு வந்தது. அந்த வகையில் சைவமும் அதை பின்பற்றியது.

3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்துக்கொண்டு ஒன்றும் நடப்பதில்லை. ஒரு சைவத்தையும் வளர்ப்பதில்லை. மதுரை ஆதித்தின் ஓட்டுநர்தான் வேகமாக காரை ஓட்டியுள்ளார். அதை விட்டுவிட்டு என்னை கொல்ல வருகிறார்கள் என்கிறார். அவர் ஒரு மனநோயாளி போல பேசுகிறார் என்று நான் சொல்கிறேன். மதுரை ஆதீனத்தின் கார் 4 முனை சந்திப்பில் அதிவேகமாக செல்கிறார். அந்த வழியாக வந்தவர்களை தான் அவர் கவிழ்க்கப் போனார். அவர்கள் தான் புகார் சொல்லி இருக்க வேண்டும். எங்கள் மீது காரை மோதி எங்கள் உயிருக்கு உளை வைக்க பார்த்தார் ஆதீனம்  என்று.

மடத்தின் வேலைகளை பார்க்காமல் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பாகிஸ்தான் நாட்டை போட்டுத்தள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஒரு பக்கிரி போல பேசுகிறார் ஆதீனம். இப்படியே 2 நாட்கள் பேசிவிட்டு, தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று சொல்வார். மத்திய அரசு இருக்கிறதே தடவி கொடுப்பதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பை கொடுப்பார்கள். பிறகு கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுக்கக்கூடாதவர்களுக்கு கொடுப்பார்கள். மதுரை ஆதீனம் எதற்காக இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றால்? தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான்.

மதுரை ஆதினத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இந்த மடாதிபதிகளை எல்லாம் கூட்டினாரே பாரிவேந்தர், அவருக்கும் நம்முடைய சமயம் என்ன என்று தெரியாது. இந்த சைவ மடாதிபதிகள் எல்லோருக்கும் நம்முடைய சமயம் என்ன என்று தெரியாது. சைவ மதத்தை இந்து மதத்தின் உட்பிரிவு என்று மாற்றி வைத்துள்ளார்கள், அதை இவர்கள் ஆமாம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எதற்கு சைவ மடாதிபதிகளாக இருக்கிறார்கள்?. திருநாவுக்கரசருக்கு இந்து மதம் தெரியுமா? ஞானசம்பந்தருக்கு தெரியுமா? கடைசியாக வந்த வள்ளலாருக்கு தெரியுமா?

இந்து மதம் என்பது வேத மதத்தினுடைய ஆதிக்கம் உடைய மதமாகும்.  சுதந்திர போராட்டத்தின் போது இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரையும் வேத மதம் மற்றும் வடமொழியின் ஆதிக்கத்திற்குள் ஒடுக்குவதற்கும், பிறகு கிளை பிரிவாக இருக்கவும் ஏற்பாடு செய்தார்கள். மதத்தின் பெயரால் நடைபெற்ற இந்த வேலையால் இந்து, முஸ்லிம் என்று 2 பிரிவுகள் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் நிறுத்தப்பட்டார்கள். இந்து மதம் என்கிற மதமே கிடையாது. பாரதியார்தான் முதன் முதலில் இந்து என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதற்கு முன்னாள் இருப்பவர்களுக்கு அந்த வார்த்தையே கிடையாது.

நம்முடைய மதம் சைவம், வைணவம், குல தெய்வ வழிபாடாகும். இந்தியாவில் இருவருக்கு தான் நாகரிகம் இருந்தது. ஒன்று பிராமணர்களுக்கு வேதநாகரிகம். மற்றொன்று தமிழர்களுக்கு திராவிட நாகரிகம். இங்கே தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் உள்ளன. பொருளதிகாரம் எழுதியவன் தமிழன்தான். ஆனால் இந்த மடாதிபதிகள் பல்லக்கு ஏறுவதற்கு அலைகிறார்களே தவிர, சைவத்தை பல்லக்கு ஏற்றுவதற்கு அல்ல. அவர்கள் ஏறுவதற்கு அலைகிறார்கள். இந்திய விடுதலைக்கு பின்னர்தான் இது நடைபெற்றது. அவர்களும் நமது லிங்கத்தை ஏற்றுக்கொண்டு, சாமியை ஏற்றுக்கொண்டு இங்கே வந்து  பூசை எல்லாம் செய்கிறான். பிறகு அவனது வேதத்தை நம் தலைமீது தூக்கி வைத்து விட்டான். சைவம் என்பது தனித்தன்மையான மதம். சைவமும் பிராமண மதமும் இணைந்து சமணத்தையும், பவுத்தத்தையும் ஒழிக்க போராடின. பிறகு இவர்கள் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டனர். பிறகு ஆதி சங்கரர் காலத்தில் அதை பிரிக்க முயன்றார்கள். ஞான சம்பந்தர் சைவ மதத்திற்காக போராடியதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மடாதிபதிகளில் ஒரே ஒருவர்தான் ஆய்வு உடையவராக இருந்தார். திராவிட மாபாடியம் என்கிற பெயரால் சிவஞான யோகியார் என்பவர் 12 சூத்திரங்களுக்கு உரை எழுதினார். உலகத்தில் ஒரு மதத்தை 12 சூத்திரங்களுக்குள் சொல்வதற்கு அவரால் மட்டும்தான் முடிந்தது. அதற்கு மிகப்பெரிய பார காவியம் போன்ற உரை எழுதவும் அவர் ஒருவரால்தான் முடிந்தது. அவரை தவிர, மற்றவர்கள் எல்லாம் சோத்து சாமியார்கள். சிவஞான போதம் என்பது திராவிட நூல். அதனால் அவர் எழுதிய விளக்க உரைக்கு  திராவிட மாபாடியம் என்று பெயர் வைத்தார். பவுத்தம், சமணம் போன்ற பிற மதங்களின் சிறந்த கோட்பாடுகளை வாங்கிக்கொண்டு அதன் மீது ஏறி நிற்பதற்கு சைவமும், வைணமும் இரண்டும் முயன்றுள்ளன.

மக்களிடம் மனத்தூய்மை ஏற்படுத்துவதற்கும், சமயத்தின் வழியாக மக்களை மேம்படுத்துவதற்கும் ஏற்பட்ட மடாதிபதிகள் எல்லாம் கார்களிலே, பண்டார சந்திகள் எல்லாம் பாண்டியா கார்களிலே பவனி வருகிறீர்கள். வசதிகளிலே புறள்கிறீர்கள். அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை தவிர நீங்கள் சாமியாராக இருப்பதில் என்பதில் என்ன புதுமை உள்ளது? தனிமனிதனின் நுகர்ச்சி வாழ்க்கைக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை உங்கள் வாழ்க்கை. உங்களுடைய மதம், மடம் ஏற்பட்டது சைவ சமயத்தின் ஆக்கத்திற்காக என்பதே தெரியவில்லையே.

நீ இந்து என்பதை இல்லை என்று சொன்னால்தானே சைவம் தலைக்கும். நாம் என்ன வேத நாகரிகமா? அதை ஆதிசங்கரர் கடைபிடிக்கட்டும். திருநாவுக்கரசருக்கும், ஞானசம்பந்தருக்கும் அதில் வேலை இல்லை. பாரிவேந்தர் பணம் இருக்கிறது என்பதால் மாநாடு நடத்துகிறார். மதுரை மடாபதி என்னை கொல்லப் பார்க்கிறார்கள் என்று சொன்னதற்கு பிறகுதான் அந்த மாநாடே வெளியே தெரிகிறது. எவருக்கு தன்னுடைய மதம் சைவம்தான். இந்து இல்லை என்று தெரியாதவர்கள் எல்லாம் மடாதிபதியாக உள்ளனர். மடம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ