spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவெளியே காந்தி! உள்ளே சாதி! பழ.கருப்பையா வீட்டில் வெடித்த சர்ச்சை!

வெளியே காந்தி! உள்ளே சாதி! பழ.கருப்பையா வீட்டில் வெடித்த சர்ச்சை!

-

- Advertisement -

பழ.கருப்பையா மேடைகளில் சமத்துவம் பேசுவதற்கும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துகொள்வதற்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளதாக இயக்குநர் கரு.பழனியப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

karu palaniyappan

we-r-hiring

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களுடன் உறவினர்களை பேச விடாமல், மூத்த அரசியல்வாதியும், தனது பெரியப்பாவுமான பழ.கருப்பையா தடுப்பதாக இயக்குநர் கரு. பழனியப்பன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி இங்கே:- கவியரசு கண்ணதாசன் குறித்து உயர்வாக பேசும் பழ.கருப்பையா, அவரது இந்து மதம் குறித்த பார்வைகளுக்காக கடுமையாக விமர்சிப்பார். அப்படி இருக்கும் நபர் ஏன் சாதியை வீட்டிற்குள் கொண்டு வருகிறார்? எனக்கு உறவு என்று என்னுடைய சாதிக்காரர்கள் தான் இருப்பார்கள். 25 வயதுக்கு பின்னர் நான் பொதுவாழ்வுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு என்னுடைய உறவினர்களை தாண்டி ஏராளமான நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நான் மீண்டும் வீட்டிற்கு செல்கிறபோது இந்த உறவுகள் தான் வரவேற்கும். அப்போது அந்த உறவுகளை வரவே கூடாது. யாருமே சேராதீர்கள் என்று மறைமுக அழுத்தம் கொடுப்பதும் சாதிய வன்கொடுமைதான். இதன் காரணமாக நான் பாதிக்கப்பட வில்லை. என்னுடைய தந்தை பாதிக்கப்படுகிறார். தன்னை மீறி எனக்கு கல்யாணம் செய்து வைத்ததால் என் தந்தை மீது கோபம். என் வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள். நான் இதை சரி செய்துகொண்டே வருவார்கள். எங்கள் வீட்டு விஷேசத்திற்கு யாருமே வர மாட்டார்கள். என் மனைவியும், பிள்ளையும் காரைக்குடிக்கு 2 முறை தான் வந்திருக்கிறார்கள்.

பழ.கருப்பையா, என் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டார். அவற்றை எல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று இல்லை என்று உடைத்தேன். காவல்துறையில் என் மீது புகார் அளித்தார். வீட்டில் உள்ளவர்களை எல்லாம் மிரட்டல் விடுத்தேன் என்று சொன்னார். எப்போதும் அவர் மீது பெரிய மரியாதை உண்டு. நான் 6 படங்களை எடுத்துள்ளேன். அந்த படங்களை வெளியிடாதவர்கள் உள்ளன. என்னுடைய படத்தை எடுத்து முடிக்காத தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் மீது எல்லாம் நான் புகார் அளித்தது கிடையாது. அதை கடந்து அடுத்த வேலைக்கு சென்றுவிடுவேன். கொஞ்சநாள் தொலைக்காட்சிக்கு செல்வேன். படம் இயக்குவேன். புத்தகம் படிக்க செல்வேன். கூட்டங்களுக்கு பேச செல்வேன். எப்படியாவது ஒரு வேலையை வலிந்து ஏற்றுக்கொள்வேன். ஏன் என்றால் வேலை செய்வது மட்டும்தான் இவற்றில் எல்லாம் இருந்தும் விலக்கும். வேலை இல்லாவிட்டால் இதை எல்லாம் யோசிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதை செய்கிறபோதுதான் ஒருகட்டத்தில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதை தற்செயலாக மேடையில் ஒரு வரிசொன்னேன். இதில் மறைக்க என்ன உள்ளது.

கல்யாணம் செய்து கதியற்று நின்றேன் என்று சொன்னேன். இந்த வீட்டில் பிறந்த என்னை கொண்டாடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்னை ஊரெல்லாம் கொண்டாடுகிறது. உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் யாரைதான் கொண்டாடு வீர்கள். இதுவரை உங்கள் சொந்த மகனை கொண்டாடி இருக்கிறீங்களா? கோவை தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக என் அண்ணன் பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழனின் போன் நம்பரை கேட்டு எனக்கு அழைத்தார்கள். அவர் சைவ சித்தாந்தம் குறித்து அருமையாக பேசுவார் என்று சொல்லி கொடுத்தேன். ஆனால் என் பெரியப்பா நம்பரை கொடுக்க மறுத்துவிட்டார். சிலரது இயல்பு யாரையும் கொண்டாடக்கூடாது.

உங்களுக்கு உலகின் எல்லா விஷயங்களும் புரிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டீர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் மட்டமாக தெரிவார்கள். சித்தார்த்தன் ஞானம் பெற்று புத்தரானார். ஞானம் பெற்ற பின்னர் புத்தர் செய்த முதல் காரியம் அரண்மனையை விட்டு வெளியேறியது தான். நம்ம ஞானம் பெற்றுவிட்டோம். இவர்கள் எல்லாம் அறிவு இல்லாதவர்கள். அவர்கள் கிடந்துவிட்டு போகிறார்கள் என்று வெளியே போய்விட்டார். நீங்கள் ஞானம் பெற்றுவிட்டீர்கள் என்றால் வெளிய போங்க. நாங்க அறிவு இல்லாதவர்கள் பூரா வெந்ததை தின்றுவிட்டு வெளிக்க போய்விட்டு சாகிறோம். நாங்கள் அறிவு இல்லாதவர்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாதா? எப்போது பார்த்தாலும் நான் சொல்வதை கேள் என்கிறார். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கிறது. அந்த அறிவுக்கும் ஒன்று தெரியுமல்லவா? அதைநான் செய்கிறேன் விடுங்கள்.

காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டால் பிரச்சினை சரியாகி விட்டது. வாழ்க்கையே வண்ண மயமாகிவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பதற்கு நான் ஒரு உதாரணம். எனக்கு எல்லாம் இருக்கு. ஆனாலும் சைக்கலாஜிக்கலாக என்னை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதற்கு சாதிதான் காரணமாக வந்து நிற்கிறது. திமுக மேடையில் இந்த விவகாரத்தை வெளியிட்டதால் பழ. கருப்பையா உடனான முரண்பாடு அதிகரிக்காதா என்று கேட்கிறார்கள். தற்போது என்ன அவருடன் உடன்பாடுடனான இருக்கிறோம்? என்னை தனியாக விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். எனக்கான பங்கை கொடுங்கள் தனியாக செல்கிறேன். அதை பொதுவில் வைத்துக்கொண்டு ஏன் எல்லேரையும் இம்சைபடுத்துகிறீர்கள்? அந்த வீட்டிற்குள் எனக்கு என்று 4 அறைகள் இருக்கும் அல்லவா? அந்த 4 அறைகளில் ஒன்றில் நான் கழிவறையை கட்டுக்கொள்வேன் தானே.

சாதிய கொடுமைகள் உள்ளது என்பதை இந்த சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் நான் பேசினேன். காந்தி தனது வாழ்க்கையில் பேசியதற்கும் , வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முயற்சித்தார்.  என்வாழ்வுதான் உலகிற்கு சொல்லும் செய்தி என்றார். அப்போது நீங்கள் பேசுவதற்கும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அப்படி குறைக்கும்போது தான் மேன்மையான மனிதராவீர்கள். ஆனால் இங்கே நன்றாக பேசுவேன். ஆனால் மற்றவர்களை எல்லாம் கீழே வைத்துக்கொள்வேன் என்று சொன்னால் நீங்கள் பெரிய மனிதரா?

இந்த பிரச்சினை முடியவே முடியாது. அந்த வீடுதான் பிரச்சினை என்றால் அது கிடையாது. ஏனென்றால் நான் அந்த வீட்டிற்குள் போகாமல் தான் இருந்தேன். ஏனென்றால் வசதிகள் குறைபாட்டு உடன் அந்த வீடு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து நான் எனது இயக்குநர் காலத்தை போன்று கழிவறை வாசலில் வரிசையில் நிற்க முடியாது. அப்போது வீட்டை மேம்படுத்துவோம் என்கிறேன். அதற்கு சம்மதிக்க மறுக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? எல்லோரும் அந்த வீட்டிற்குள் வந்து புழங்கிவிடுவார்கள். அப்படி நடக்கக்கூடாது. அப்படியே இருக்கட்டும் அந்த வீடு என்று நினைத்தீர்கள் என்றால்? இதற்கு நான் காதல் திருமணம் செய்தது தான் காரணமாகிறது.

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தது தான் காரணமாகிறது. மற்ற யாருடன் உங்களுக்கு சிக்கல் கிடையாது. என் தொடர்பாக மட்டும் ஏன் சிக்கல் வருகிறது என்றால்? அப்படி என்றால் இதுதான் காரணமாக இருக்க முடியும். அப்போது நான் சொல்லித்தான் ஆக வேண்டும். பெரிய மனிதர் என்று நாம் சொல்லாமல் இருந்தால், அவர்கள் சின்ன மனிதர்களாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாழ்வில் தோற்றுப் போன எல்லோரும் கடைசியில் சாதிக்குள் தான் ஒளிந்து கொள்வார்கள். ஒளியாமல் இருந்து நான் எடுத்த கொள்கைக்காக தோற்றுப்போனேன் என்று இருந்தால் பரவாயில்லை.

MUST READ