spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை2026 திமுகவுக்கு ரஜினி மறைமுக ஆதரவு! விஜய்க்கு செக்! உமாபதி நேர்காணல்!

2026 திமுகவுக்கு ரஜினி மறைமுக ஆதரவு! விஜய்க்கு செக்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

இளையராஜா பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திமுக அரசுக்கு தனது மறைமுகமான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.விஜயை அரசியலில் இருந்தும், திரைத்துரையில் இருந்தும் அகற்றுவதற்கான வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகர் விஜய் அரசியல் குறித்தும், ரஜினி திமுகவுக்கு ஆதராக களமிறங்கியுள்ளது தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: வரும் 2026ஆம் ஆண்டில் விஜயை அரசியலில் இருந்தும், சினிமாவில் இருந்தும் தூக்கி எறிவதற்கான வேலைகளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏன் அரசியலுக்கு புதிதாக ஒருவர் வந்து ஆட்சியை பிடிக்கக் கூடாதா? என்று அடிப்படை அரசியல் புரிதல் இல்லாதவர்கள் சொல்லலாம். புதிதாக ஒருவர் கட்சி தொடங்கக் கூடாது என்றோ, ஆட்சியை பிடிக்கக்கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. உங்களுடைய அரசியல் கொள்கை என்ன? உங்களுக்கு அரசியலில் என்ன தெரியும்? ஆட்சி முறைகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? எந்த மாதிரியான ஆட்சியை நீங்கள் தருவீர்கள்? இதற்கு முன்பாக ஆட்சி செய்த எம்ஜிஆர், கலைஞர், ஜெலலிதா போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களால் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் கூட பேச முடியவில்லை. எழுதி வைத்ததை பேப்பரை பார்த்து படிக்கிறீர்கள். நீங்கள் எங்களையும் சேர்த்து ஆட்சி செய்ய ஆசைப்படுகிறீர்கள். ஆனால் பேப்பர் இல்லாமல் 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பேச தெரியவில்லை.

என்டிடிவியில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக நிருபராக இருப்பவர் சாம் டேனியல். 50 வயதை கடந்தும் அவர் நிருபராக உள்ளார். நேபாளத்தில் ஜென் ஸி இளைஞர்கள் போராட்டத்தில் நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். ஆனால் நிருபர்கள் மீது யாரும் கை வைக்கவில்லை. பிரான்ஸ் நாட்டில் பெரிய அளவில் கலவரம் நடைபெறும் நிலையில், அதனை பத்திரிகையாளர்கள் கவர் செய்கிறார்கள். ஆனால் விஜய் மாநாட்டில் நிருபர் முன்பாக தவெக தொண்டர் ஒருவர் குத்தாட்டம் போடுகிறார். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி கட்சி நடத்தப் போகிறீர்கள். தமிழ்நாட்டிற்கு என்ன பெரிதாக செய்துவிட போகிறீர்கள். விஜயின் பிரச்சாரத்தில் என்ன சாரம்சம் உள்ளது? எந்த கொள்கை குறித்து பேசினீர்கள். உலக அரசியல் என்ன? இந்திய அரசியல் என்ன? எதை நோக்கி பாஜக அரசு சென்று கொண்டிருக்கிறது? எதை நோக்கி திமுக – அதிமுக போய்க் கொண்டிருக்கின்றன? என்பதை விவரித்து நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று  சொல்ல வேண்டும்.

இந்த கோபம் சினிமாத்துறையிலும் இருக்கிறது. விஜயின் உடல்மொழி, அவருடைய பேச்சு போன்றவை மூத்த நடிகர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. நடிகர் கமல்ஹாசனை மார்க்கெட் போனவர் என்று சொல்கிறார். அவரை போன்று நடிக்க விஜயால் முடியுமா? அல்லது ரஜினிகாந்தை போன்று உச்சத்தில் இந்த வயதில் உச்சத்தில் இருக்க முடியுமா? ரஜினி, கமல் போன்ற பலரும் விஜய் மீது கோபத்தில் இருப்பதற்கு காரணம் அவர் மூத்த நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பது கிடையாது. எனவே ரஜினிகாந்த், 2026ல் விஜயை வீட்டிற்கு அனுப்புகிற விதமாக மறைமுகமாக திமுகவை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் தேசிய கட்சிகளுக்கும், தமிழ்நாட்டில் பழைய, புதிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருந்துகொண்டு, வாங்க 2026ல் பார்த்துக் கொள்ளலாம் என ஸ்டாலின் செயல்படுவதாக ரஜினி தெரிவித்து உள்ளார். இது மிகப்பெரிய ஒரு வார்த்தை. மிகப்பெரிய ஒரு ஆதரவாகும்.

ரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!

ரஜினிகாந்த் சாதாரண நபர் கிடையாது. அவர் நிர்பந்தம் காரணமாக ஒரு வலதுசாரி ஆதரவாளராக இருந்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் கொரோனா வந்து விட்டது. கட்சி தொடங்கவில்லை என்று சொல்லி பாஜகவினருக்கு ஆப்பு வைத்தார்.  ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு ராஜதந்திரி. நிச்சயமாக 2026ல் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு ஆப்பை ரஜினியும், அவருடைய ரசிகர்களும் வழங்குவார்கள். ரஜினிகாந்த், புரோட்டாக்கால் அடிப்படையில் முதல்வர், துணை முதல்வருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து தான் பேசினார். இந்த பண்பு விஜயிடம் உள்ளதா? அரசியல் கட்சி என்றால் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்கள் கட்சி தொடங்கியபோது தொண்டர்கள் இப்படியா? நடந்துகொண்டனர். எனவே விஜய்க்கு பெரிய அளவில் ஆப்பு அடிக்க போகிறார்கள். அவர் தோற்றுவிட்டார் என்றால் மத்திய, மாநில அரசுகளும் அவருக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ