Homeசெய்திகள்கட்டுரை"100 நாள் ஆட்சி... 25 வருஷம் ஆள்றது அப்புறம்!" – விஜய்க்கு எஸ்பி லட்சுமணன் கடுமையான...

“100 நாள் ஆட்சி… 25 வருஷம் ஆள்றது அப்புறம்!” – விஜய்க்கு எஸ்பி லட்சுமணன் கடுமையான விமர்சனம்!

-

- Advertisement -

தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் ஆட்சி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தவெக அரசு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த 100 நாள் ஆட்சி மக்கள் போற்றும் ஆட்சியா அல்லது போஸ்டர் ஆட்சியா என்பது குறித்துப் பிரபல பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் பல்வேறு காரசாரமான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகளின் விவரம்:

we-r-hiring

1. 100 நாள் ஆட்சியில் தொடரும் சறுக்கல்கள்!

  • பள்ளிகளில் அரசியல்: ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே பள்ளிகளுக்குள் சென்று கட்சி கொடிகளைக் கட்டுவது, மாணவர்களிடம் அரசியல் நஞ்சை விதைப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன. காரைக்குடியில் பள்ளி குழந்தைகளை ‘டிவிகே’ என முழக்கமிட வைத்ததற்கு அரசாங்கம் மற்றும் விஜய் தரப்பிலிருந்து வலுவான கண்டிப்பு வரவில்லை.

  • பெண்களுக்கான பாதுகாப்பு: ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தபோது, சொந்தக் கட்சியினரே அதில் சம்பந்தப்பட்டிருந்தாலும் விஜய் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • மௌனம் காக்கும் முதல்வர்: ஒரு குற்றச் சம்பவம் நடந்தால் அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றாமல் கிணற்றில் போட்ட கல் போல முதல்வர் விஜய் மௌனமாக இருப்பது மக்களிடத்தில் அவர் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

2. நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் சொத்து வரி உயர்வு!

  • சென்னை சொத்து வரி உயர்வு: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருக்கும் விஜய்யின் கவனத்திற்கு வராமல் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறு முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருந்தால், அந்த அதிகாரி உடனடியாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

  • மின்வாரியப் பிரச்சனை: ஆட்சிக்கு வந்த முதல் 50 நாட்களில் மின்தடை தொடர்கதையாக இருந்தது. நிர்வாகத்தில் என்ன தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே அரசிற்கு இரண்டு மாத காலம் தேவைப்பட்டுள்ளது.

  • ஈடுபாடு அவசியம்: முதலமைச்சர் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருவதும் மாலை வரை இருப்பதும் மட்டும் போதாது; நிர்வாகத்தில் திறம்படச் செயல்பட்டுத் தன் ஈடுபாட்டைக் காட்ட வேண்டும்.

3. அமைச்சர்களின் ஆணவப் பேச்சும்… திசைதிருப்பல் அரசியலும்!

  • அமைச்சர்களின் பேச்சு: “அடுத்த 25 ஆண்டுகள் நாங்களே ஆளுவோம்” என சட்டசபையில் தவெக அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அதிகார மதம் பிடித்த இளைஞர்களாக அமைச்சர்கள் மாறுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.

  • விஜய்யை மூடி மறைக்கும் வேலை: “முதலமைச்சர் பேச மாட்டார், அமைச்சர்கள்தான் பேசுவார்கள்” என்று அவரை மூடி மறைப்பது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கே ஆபத்தாக முடியும்.

  • திசைதிருப்பல் அரசியல்: முக்கியமான நிர்வாகப் பிரச்சனைகள், மின்வாரியக் கோளாறுகள் மற்றும் சொத்து வரி உயர்வு எழும்போது, அதைத் திசைதிருப்பும் வகையிலான பிற நிகழ்வுகள் நீண்ட காலத்திற்கு உதவாது. தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

4. காவேரி வழக்கில் திமுக முந்திக்கொண்டதா?

காவேரி விவகாரத்தில் சரியான நேரத்தில் மனுத் தாக்கல் செய்யாமல் தவெக அரசு தாமதித்ததால் திமுக முந்திக்கொண்டது. இரண்டு தரப்பும் தமிழ்நாட்டின் நலனுக்காகவே நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ‘திமுக வழக்கு தொடுத்ததால் பின்னடைவு’ என அமைச்சர் நிர்மல் குமார் பேசுவது அரசியல் அறியாமையைக் காட்டுகிறது.

அதிகமான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்குக் குறைந்தபட்ச நம்பிக்கையைக் கூட முதலமைச்சர் விஜய் ஏற்படுத்தத் தவறிவிட்டார். தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, உடனடியாகத் தானாக முன்வந்து பேசத் தொடங்கவில்லை என்றால், 2.5 ஆண்டுகளைக் கூட இந்த அரசால் கடக்க முடியாது என எஸ்பி லட்சுமணன் அழுத்தமாக எச்சரித்துள்ளார்.

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

MUST READ