Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

-

- Advertisement -

சென்னையில் ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து சவரன் ரூ.54 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இன்றி ஒரே நிலையில் நீடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ரூ.55 ஆயிரத்து 40க்கு விற்பனையானது.இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

we-r-hiring

மறுபடியும் ரூ.20 உயர்ந்தது தங்கம் விலை... ஷாக்கான வடிக்கையாளர்கள் !

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.6,880க்கு வர்த்தகமான நிலையில், இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.6,865க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.97க்கு விற்பனையாகிறது. இதேபோல் பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.97 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

MUST READ