Homeசெய்திகள்சென்னைசென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 20 நாட்களில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்!

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 20 நாட்களில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்!

-

- Advertisement -

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து நிலுவையில் இருந்த ‘இ-சலான்’ அபராதத் தொகையை வசூலிக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சென்னையில் சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது மற்றும் தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘இ-சலான்’ மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆனால், அபராதம் விதிக்கப்பட்ட பலர் அதை உடனடியாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர். கடந்த ஓராண்டில் சுமார் ரூ.120 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.35 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நிலுவையில் உள்ள ‘இ-சலான்’ அபராதங்களை வசூலிக்க சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி சார்பில் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘இ-சலான்’ விவரங்களையும், நிலுவையில் உள்ள அபராதத் தொகையையும் எளிதாக தெரிந்துகொள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் உள்ள ‘இ-சலான்’ குறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டன. மேலும், நேரில் வந்த பொதுமக்களுக்கும் நிலுவை அபராதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த தொடர் நடவடிக்கையின் பலனாக, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் நிலுவையில் இருந்த அபராதத் தொகையை செலுத்தத் தொடங்கினர். இதன் மூலம் இதுவரை ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை கொடூரத்தின் உச்சம் – தவெக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம் – போராடும் செவிலியர்களை கைது செய்தது ஏன்? – அரசுக்கு கேள்வி

MUST READ