Homeசெய்திகள்சென்னைஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் அனுமதியின்றி கட்சிக் கொடிகள் கட்டியதாகப் புகார் – மத்திய தொழில்...

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் அனுமதியின்றி கட்சிக் கொடிகள் கட்டியதாகப் புகார் – மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் காங்கிரஸார் வாக்குவாதம்; பரபரப்பு!

-

- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவகத்தின் பாதுகாப்புப் பகுதியில், அனுமதியின்றி காங்கிரஸ் கட்சிக் கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை அகற்றிய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் அனுமதியின்றி கட்சிக் கொடிகள் கட்டியதாகப் புகார் – மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் காங்கிரஸார் வாக்குவாதம்; பரபரப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நினைவகம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜீவ் காந்தி நினைவகத்தை ஒட்டிய பாதுகாப்புப் பகுதிக்குள் காங்கிரஸ் கட்சியினர் விதிமுறைகளை மீறி கொடிக்கம்பங்கள் மற்றும் கட்சிக் கொடிகளைச் சுற்றுச்சுவரில் கட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிகளையும் கொடிக்கம்பங்களையும் அகற்றி பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர், மாவட்டத் தலைவர் அருள்ராஜ் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை RSS கைக்கூலிகள் எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம் செய்ததாகவும், இதற்குப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ராஜீவ் காந்தி நினைவகத்தின் பாதுகாப்புப் பகுதியில் அனுமதியின்றி கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரும், அவற்றை அகற்றிய பாதுகாப்புப் படையினருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தத் திட்டம் – ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தயாரிக்க ரூ.45.50 கோடி ஒதுக்கீடு!

MUST READ