Homeசெய்திகள்சென்னைஅசோக் லேலண்ட் தொழிற்சாலைக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்குக் காலை நேரத் தடை – உற்பத்தி பாதிப்பு;...

அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்குக் காலை நேரத் தடை – உற்பத்தி பாதிப்பு; தவெக எம்.எல்.ஏ தலையீடு எனக் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

காலை 7 மணி முதல் 10 மணி வரை கட்டுப்பாடு
இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில், தற்போது காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த வழித்தடத்தில் லாரிகள் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் காலை 10 மணிக்குப் பிறகே சரக்கு வாகனங்கள் தொழிற்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தெரிகிறது.அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்குக் காலை நேரத் தடை – உற்பத்தி பாதிப்பு; தவெக எம்.எல்.ஏ தலையீடு எனக் குற்றச்சாட்டு!

பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. காவல்துறையினரிடம் தெரிவித்த தகவலின் பேரில், ஆவடி காவல் ஆணையரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தலையீட்டின் காரணமாகவே போக்குவரத்துக் காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உற்பத்திப் பணிகள் பாதிப்பு – தொழிலாளர்கள் காத்திருப்பு

காலை நேரத்தில் தொழிற்சாலைக்கு வர வேண்டிய உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால், காலை ஷிப்டில் பணிக்கு வரும் தொழிலாளர்கள் பணிகளைத் தொடங்க முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் தினசரி உற்பத்தி இலக்கும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கனரக வாகனங்கள் மட்டுமின்றி, உதிரிபாகங்களை ஏற்றிச் செல்லும் இலகுரக சரக்கு வாகனங்களையும் போக்குவரத்துக் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

லாரிகளை நிறுத்த இடமின்றித் தவிக்கும் ஓட்டுநர்கள்

தொழிற்சாலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுடன், சாலையோரங்களிலும் வாகனங்களை நிறுத்தக் காவல்துறையினர் அனுமதிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் லாரிகளை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய சூழலில் உணவு அருந்துவதற்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்குக் காலை நேரத் தடை – உற்பத்தி பாதிப்பு; தவெக எம்.எல்.ஏ தலையீடு எனக் குற்றச்சாட்டு!

முன்கூட்டியே ஆலோசனை நடத்தவில்லை எனப் புகார்

இந்தக் கட்டுப்பாடு தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் முன்கூட்டியே எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்றும், திடீரென வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மட்டுமே உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இந்த வழியாகச் செல்வதாகவும், சாலை போதிய அகலத்துடன் இருப்பதால் இதுவரை போக்குவரத்து விபத்துகள் ஏற்படவில்லை என்றும் ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டைத் தளர்த்தக் கோரிக்கை

தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் சிரமங்களைக் குறைக்கவும் உதிரிபாகங்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கான காலை நேரக் கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேநேரத்தில், பொதுமக்களின் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், தொழிற்சாலை நிர்வாகம், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆலோசனை நடத்தி, சரக்கு வாகனங்கள் செல்வதற்கான உரிய நேர அட்டவணையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – 2 பேர் கைது!

MUST READ