Homeசெய்திகள்சென்னைபட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு முறையாக ரயில்கள் வருவதில்லை – திருவள்ளூர், அரக்கோணத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கப்...

பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு முறையாக ரயில்கள் வருவதில்லை – திருவள்ளூர், அரக்கோணத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கப் பயணிகள் சங்கம் கோரிக்கை!

-

- Advertisement -

ஆவடியை அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் உரிய நேரத்தில் வருவதில்லை என்றும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பட்டாபிராம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு முறையாக ரயில்கள் வருவதில்லை – திருவள்ளூர், அரக்கோணத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கப் பயணிகள் சங்கம் கோரிக்கை!

சென்னை பட்டாபிராம் ரயில் நிலையத்தின் வெளியே, பட்டாபிராம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராய் ரொசாரியோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பட்டாபிராம் ரயில் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பயணிகள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து அவர் பேசினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பட்டாபிராம் ரயில் நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த ரயில் நிலையத்தில் தற்போது ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், 20 ரயில்கள் இயக்குவதற்கான வசதிகள் இருந்தும் அவை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ரயில்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்றும், எந்தெந்த ரயில்கள் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன என்பது குறித்த முறையான அறிவிப்புகள் கூட இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளுக்குக் கூடுதல் ரயில்களை இயக்கினால், அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் அனைத்து ரயில்களும் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பட்டாபிராம் ரயில் நிலையத்தின் வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, நிலையத்தை முறையாகச் சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், கூடுதல் ரயில் சேவைகளையும் தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஏராளமான ரயில் பயணிகள் கலந்துகொண்டு, ரயில் சேவை தொடர்பான தங்களது அதிருப்தியையும் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.

பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர் கைது!

MUST READ