Homeசெய்திகள்சென்னைசென்னையில் நள்ளிரவில் பயங்கரம்: ஹாரன் அடித்த விவகாரத்தில் வீட்டிற்குள் புகுந்து நபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு...

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்: ஹாரன் அடித்த விவகாரத்தில் வீட்டிற்குள் புகுந்து நபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு – பெண்களின் அலறலால் பதற்றம்!

-

- Advertisement -

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நள்ளிரவில் வீட்டைச் சுற்றி வளைத்த மர்மக் கும்பல் ஒருவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரன் அடித்ததில் தொடங்கிய தகராறு!

பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்சய் என்பவர் தொடர்ந்து ஹாரன் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டன், ஏன் தொடர்ந்து ஹாரன் அடிக்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்தத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலையில் வந்து விசாரிப்பதாகக் கூறி போலீசார் இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டைச் சுற்றி வளைத்த கும்பல்!

இந்நிலையில், இரவு சுமார் 10.30 மணியளவில் சஞ்சய் மற்றும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்திகளுடன் நீலகண்டனின் வீட்டிற்கு வந்துள்ளது.

வீட்டின் கதவைத் தட்டி, குழந்தைகள் உட்பட யாரையும் விடமாட்டோம், அனைவரையும் வெட்டிச் சாய்ப்போம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நீலகண்டனை அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும், பெண்களும் அலறித் துடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த நீலகண்டனை மீட்க முயன்றவர்களையும் அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியதாகத் தெரிகிறது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி!

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த நீலகண்டனை அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் கொடூரமான தாக்குதலாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர் கைது!

MUST READ