- Advertisement -
நீலாங்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது, அவரை முதலமைச்சர் விஜய் என நினைத்து சிறுவர்களும் பொதுமக்களும் கைகாட்டிய சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனது மகன் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது, முதலமைச்சர் விஜய் வருகிறார் என நினைத்த சாலையோரம் இருந்த சிறுவர்களும் பொதுமக்களும் அவரைப் பார்த்துக் கைகாட்டியுள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு வாகனங்களுடன் சென்றது முதலமைச்சர் விஜய் அல்ல; முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது பின்னர் தெரியவந்தது. முதலமைச்சர் விஜய் செல்லும் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் சுவாரஸ்யமான சூழல் நிலவியது.
