Homeசெய்திகள்சென்னைசென்னையில் மாட்டுக்கறி, சிக்கன் பக்கோடாவில் கலர் பவுடர் பூசி விற்பனை? – கடையில் உணவு பாதுகாப்புத்துறை...

சென்னையில் மாட்டுக்கறி, சிக்கன் பக்கோடாவில் கலர் பவுடர் பூசி விற்பனை? – கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை; மாட்டுக்கறி பறிமுதல்!

-

- Advertisement -

சென்னையில் மாட்டுக்கறி மற்றும் சிக்கன் பக்கோடாவில் சிவப்பு நிற கலர் பவுடர் பூசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.சென்னையில் மாட்டுக்கறி, சிக்கன் பக்கோடாவில் கலர் பவுடர் பூசி விற்பனை? – கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை; மாட்டுக்கறி பறிமுதல்!

சைதாப்பேட்டையில் உள்ள பிரியாணிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டுக்கறியைப் பறிமுதல் செய்து பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் மாட்டுக்கறி பிரியாணி தயாரிக்கும் உணவகங்கள் அனைத்திலும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

ரகசியத் தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை

சென்னை சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாட்டுக்கறி, சிக்கன் பக்கோடா உள்ளிட்ட உணவுப் பொருட்களில் சிவப்பு நிற கலர் பவுடர் பூசி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், சைதாப்பேட்டை ஈஸ்ட் ஜோன்ஸ் சாலையில் உள்ள பாய் பிரியாணி கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாட்டுக்கறி பறிமுதல் – பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு

அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டுக்கறியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சிறிதளவு கலர் பவுடர் பூசப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மாட்டுக்கறியில் கலர் பவுடர் பூசி விற்பனை செய்ததை கடையின் உரிமையாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டுக்கறியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதன் தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நிறமியின் விவரங்களைக் கண்டறிய பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பறிமுதல்

தொடர்ந்து கடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சென்னை முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த உத்தரவு

பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாட்டுக்கறியின் முடிவுகள் கிடைத்த பின்னர், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் மற்றும் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் மாட்டுக்கறி பிரியாணி தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து உணவகங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறு தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருட்களில் அனுமதியற்ற நிறமிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்னையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 3 கொலைகள்: ஒரே நாளில் நடந்த சம்பவங்களால் அதிர்ச்சி!

MUST READ