Homeசெய்திகள்சென்னைதாம்பரம் மாநகராட்சியை 7 மணி நேரம் முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் –...

தாம்பரம் மாநகராட்சியை 7 மணி நேரம் முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் – மேயர், ஆணையாளர் உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்!

-

- Advertisement -

தாம்பரம் மாநகராட்சியின் 5-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தங்களை வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அதே பகுதியில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாம்பரம் மாநகராட்சியை 7 மணி நேரம் முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் – மேயர், ஆணையாளர் உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்!

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம், மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அளித்த உறுதியைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

தாம்பரம் மாநகராட்சியின் 5-வது மண்டலத்தில் வசிக்கும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பி பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் தங்களது குடும்பச் சூழல், வீடு மற்றும் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படும் எனக் கூறிய பணியாளர்கள், ஏற்கெனவே பணியாற்றி வரும் அதே பகுதியில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி வளாகத்தில் காலையிலிருந்தே பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் வசந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர்கள் இந்திரன், காமராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 5-வது மண்டல முகவரியில் வசிப்பவர்களைத் தவிர மற்ற பணியாளர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டியிருக்கும் என ஆணையாளர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த முடிவை உடனடியாகச் செயல்படுத்தாமல், ஆறு மாத காலத்திற்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள், சுமார் 7 மணி நேரமாகத் தொடர்ந்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்!

MUST READ