Homeசெய்திகள்சென்னைஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்கக் கோரி காசிமேட்டில் கருப்புக்கொடி போராட்டம் – முரசு புயலில்...

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்கக் கோரி காசிமேட்டில் கருப்புக்கொடி போராட்டம் – முரசு புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வேலைநிறுத்தம் அறிவிப்பு!

-

- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்ட காசிமேட்டைச் சேர்ந்த 8 விசைப்படகுகளை உடனடியாக மீட்க வேண்டும், ‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்கக் கோரி காசிமேட்டில் கருப்புக்கொடி போராட்டம் – முரசு புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வேலைநிறுத்தம் அறிவிப்பு!

இதன் ஒரு பகுதியாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் சங்கத்தினர் மற்றும் மீனவ மக்கள் சார்பில் துறைமுக வளாகத்திலும், விசைப்படகுகளிலும் கருப்புக் கொடிகளைக் கட்டி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 மாதங்களாக விடுவிக்கப்படாத 8 விசைப்படகுகள்

ஆந்திர மாநிலக் கடலோரக் காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காசிமேட்டைச் சேர்ந்த 8 விசைப்படகுகள், சுமார் ஆறு மாதங்களாகியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அந்தப் படகுகளின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, அவற்றை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளையும் உடனடியாக மீட்டு, மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை

அண்மையில் வீசிய ‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என மீனவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் மற்றும் மீனவர் நல வாரிய நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துவிட்டு, மத்திய அரசின் காப்பீட்டுத் தொகையான ரூ.2 லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவதாகக் கணக்குக் காட்டுவது கண்டிக்கத்தக்கது என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தற்போது ‘அக்வான்’ புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு வெறும் ‘ரீல்ஸ்’ அரசாகச் செயல்படாமல், மீனவர்களின் துயரங்களைத் துடைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

மேலும், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கோரிக்கைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், பழவேற்காடு முதல் கடலூர் வரை உள்ள அனைத்து மீனவ மக்களையும் ஒன்றிணைத்து விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

தவெக அரசு ‘ரீல்ஸ்’ அரசாக இல்லாமல், மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயல்படும் அரசாக இருக்க வேண்டும் என மீனவர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு எவ்வளவு? – படகு உரிமையாளர் தரப்பிடம் விளக்கம் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

MUST READ