Homeசெய்திகள்சென்னைDRI நடவடிக்கை எதிரொலி: ஆவடி மாநகர போலீசார் அதிரடி சோதனை – போதைப் பொருள் தடுப்பு...

DRI நடவடிக்கை எதிரொலி: ஆவடி மாநகர போலீசார் அதிரடி சோதனை – போதைப் பொருள் தடுப்பு வேட்டை தீவிரம்!

-

- Advertisement -

சென்னை புறநகரில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.DRI நடவடிக்கை எதிரொலி: ஆவடி மாநகர போலீசார் அதிரடி சோதனை – போதைப் பொருள் தடுப்பு வேட்டை தீவிரம்!

ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள 30 காவல் நிலைய எல்லைகளிலும் காவல்துறையினர் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, போரூர் பகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளைக் குறிவைத்து போலீசார் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சென்னை போரூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையர் ரியாசுதீன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

இதில் 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 10 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை புறநகரில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் DRI அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ஆவடி மாநகர காவல்துறையினர் இந்த அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 72.24 கிலோ ஹெராயின் பறிமுதல் – ஐஸ்கிரீம் வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் கைது!

MUST READ