Homeசெய்திகள்சினிமா‘கருப்பு’ பட வெற்றி விழா - நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

-

- Advertisement -

மே 15-ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “இது ஆசைப்பட்டது, ஆனால் எதிர்பார்க்காத பெரிய வெற்றி. சரியான முடிவுகளை எடுக்க வைத்த கருப்பசாமிக்கும், படத்தை நம்பிய ரசிகர்களுக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.‘கருப்பு’ பட வெற்றி விழா - நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

we-r-hiring

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, கருப்பு திரைப்படம் மிகக் குறுகிய காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் என தெரிவித்தார். சமீபகாலமாக எந்த திரைப்படத்தையும் எளிதாக ஏற்காத நிலையில், இந்தக் கதையும் அணியும் தனக்குப் பிடித்திருந்ததால் படத்தில் இணைந்ததாக கூறினார். மேலும், படம் திரையரங்குகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், ஒவ்வொரு படத்திற்கும் அதே எதிர்பார்ப்பே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.‘கருப்பு’ பட வெற்றி விழா - நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசிய சூர்யா, முதலில் எடுக்கப்பட்ட இறுதி பகுதி பின்னர் மாற்றப்பட்டதாக தெரிவித்தார். படம் முடிந்து எடிட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுமார் ஐந்து மாதங்கள் கழித்து தனது உதவியாளர் கூறிய ஆலோசனையின் பேரில் கிளைமாக்ஸ் பாடல் மற்றும் காட்சிகள் மாற்றி மீண்டும் படமாக்கப்பட்டதாக அவர் கூறினார். அந்த மாற்றமே தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், படம் பார்த்த பெரும்பாலானோர் கிளைமாக்ஸ் காட்சியே மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டுவதாகவும் சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், கருப்பு திரைப்படம் முழுமையாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் பார்வையில் உருவான படம் என பாராட்டிய அவர், படத்திற்கு ஆதரவு அளித்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

‘சாருகேசி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்…

MUST READ