Homeசெய்திகள்சினிமாவெறும் ₹19,000 பட்ஜெட்... ₹40 கோடி வசூல்! உலக சாதனை படைத்த சீன அனிமேஷன் திரைப்படம்!

வெறும் ₹19,000 பட்ஜெட்… ₹40 கோடி வசூல்! உலக சாதனை படைத்த சீன அனிமேஷன் திரைப்படம்!

-

- Advertisement -

‘அப்செஷன்’ படத்தின் சாதனையை முறியடித்து 20,000 மடங்கு லாபம் ஈட்டி புதிய சரித்திரம்!வெறும் ₹19,000 பட்ஜெட்... ₹40 கோடி வசூல்! உலக சாதனை படைத்த சீன அனிமேஷன் திரைப்படம்!

மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியாகி பல நூறு கோடிகளை வசூலிக்கும் திரைப்படங்களை உலக சினிமா அவ்வப்போது கண்டிருக்கிறது. ஆனால், உலக சினிமா வரலாற்றிலேயே இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத மிகப்பெரிய வசூல் சாதனையைச் சீனாவைச் சேர்ந்த ஒரு சிறிய அனிமேஷன் திரைப்படம் செய்து காட்டியுள்ளது.

we-r-hiring

₹19,000 செலவில் உருவான பிரம்மாண்ட சாதனை
‘நியூ லாய்’ (Niu Lai) என்ற அந்தச் சீன அனிமேஷன் திரைப்படம் தயாரிக்கப்பட்ட மொத்த செலவே வெறும் ₹19,000 (இந்திய ரூபாய மதிப்பில்) மட்டுமே. ஆனால், திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்று, இதுவரை ₹40 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தன் தயாரிப்புச் செலவைக் காட்டிலும் சுமார் 20,000 மடங்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்துள்ள இத்திரைப்படம், உலக அளவில் “பட்ஜெட்டை விட மிக அதிக மடங்கு லாபம் ஈட்டிய படம்” என்ற வரலாற்றுச் சாதனையைத் தனது பெயருக்கு மாற்றி எழுதியுள்ளது.

முந்தைய உலக சாதனை முறியடிப்பு
இதற்கு முன்பாக ‘அப்செஷன்’ (Obsession) என்ற திரைப்படம் தனது பட்ஜெட்டை விட 666 மடங்கு அதிக லாபம் ஈட்டி முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்தப் படத்தின் சாதனையை ‘நியூ லாய்’ திரைப்படம் வெகுவாக முறியடித்து உலக சினிமா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவானாலும், வலுவான கதையமைப்பும் சிறப்பான உருவாக்கமும் இருந்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

MUST READ