- Advertisement -
பாலிவுட் திரையுலகில் டாப் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பிறகும் இருவரும் பாலிவுட்டில் பிசியாக தனித்தனியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு பதான், ஜவான் திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Deepika mom to be soon | today deepika seen mumbai airport #deepikapadukone pic.twitter.com/1wu3Xm1P2v
— Bollywood World (@bwoodworld) March 10, 2024