பிரபாஸ் நடிப்பில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார் PART1-CEASEFIRE. இந்த படத்தை கே ஜி எஃப் சாப்டர் 1, கேஜிஎப் சாப்டர் 2 ஆகிய வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் 178 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தொடர்ந்து ஒவ்வொரு நானும் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் மூன்று நாட்களில் இப்படம் 402 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் சலாம் திரைப்படம் நான்காவது நாளான நேற்று 500 கோடியை கடந்திருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வரும் சலார் இன்னும் சில நாட்களில் 1000 கோடியை தொட்டு இமாலய வெற்றி பெறும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -