spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் - ஷாலினி திருமண நாள்... நட்சத்திர விடுதியில் கோலாகல கொண்டாட்டம்...

அஜித் – ஷாலினி திருமண நாள்… நட்சத்திர விடுதியில் கோலாகல கொண்டாட்டம்…

-

- Advertisement -
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதி தங்களின் 24-ம் ஆண்டு திருமண நாளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி ஷாலினி மற்றும் அஜித்குமார் ஜோடி. சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே காதலித்தனர். பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கினார். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஷாலினி, பெரும்பாலான நேரத்தை மகள் மற்றும் மகனுடன் செலவளித்து வருகிறார்.
அண்மைக் காலமாக தான் நடிகை ஷாலினி தனது மகள் அனோஷ்காவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திரை பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்வுகளிலிலும் அவர் கலந்து கொள்கிறார். மேலும், மகன் ஆத்விக்கின் கால்பந்து விளையாட்டையும் ஷாலினி ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அஜித்குமார் மற்றும் ஷாலினியின் திருமணம் நடைபெற்று, 24 ஆண்டுகள் கடந்தன. 24-ம் ஆண்டு திருமண நாளை இருவரும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். அங்கிருந்த ரசிகர்கள் அஜித் மற்றும் ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

MUST READ