spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅறிவாளி வில்லனாக ராணா... வேட்டையன் பட வில்லன் வேடம்...

அறிவாளி வில்லனாக ராணா… வேட்டையன் பட வில்லன் வேடம்…

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில், கல்வித்துறை சார்ந்து தொழில்நுட்பம் அறிந்த அறிவாளி வில்லனாக ராணா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

we-r-hiring
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ராணா இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், படத்தில் கல்வித்துறை சார்ந்த குற்றங்கள் செய்யும் தொழில்நுட்பம் அறிந்த அறிவாளி வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கவனே வெளியிட்டது. அதன்படி, ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும்.

MUST READ