Homeசெய்திகள்சினிமாசங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சத்யராஜ்!

சங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சத்யராஜ்!

-

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் இவர் ஹீரோவாகவும் உருவெடுத்து ஒரு கை பார்த்தார்.சங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சத்யராஜ்! அந்த வகையில் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதே சமயம் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் கனக்கச்சிதமாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். தற்போது சத்யராஜ் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்த சத்யராஜ் வசந்த் ரவியுடன் இணைந்து வெப்பம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சத்யராஜ், ஏ ஆர் முருகதாஸ், சல்மான்கான் கூட்டணியில் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் கூலி படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சத்யராஜ் சங்கர் இயக்கத்தில் நடிக்க மறுப்பு தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது சங்கர், ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் சத்யராஜிடம் கேட்டதாகவும் ஆனால் சத்யராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. சங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சத்யராஜ்!மேலும் சத்யராஜ், ரஜினி இருவருக்கும் இடையில் ஒரு சில கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன. அதே சமயம் தற்போது 28 வருடங்களுக்கு பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் கூலி திரைப்படத்தில் இணைய இருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ