Homeசெய்திகள்சினிமாநடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். அதன்படி இவர் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள முதல் படமான பேபி ஜான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்திலும் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து தன்னுடைய திருமணம் கோவாவில் வைத்து தான் நடைபெற இருக்கிறது என்பதையும் செய்தியாளர்களிடமும் வெளிப்படையாக அறிவித்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!அதில் டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே டிசம்பர் 11ஆம் தேதி கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது டிசம்பர் 12ஆம் தேதி தான் திருமணம் நடைபெற இருப்பது இந்த அழைப்பிதழின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 12 அன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ