நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் சேகரித்து வைத்திருக்கிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இன்று (டிசம்பர் 12) நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 வருடங்களாக தனது நெருங்கிய நண்பர் ஆண்டனி தட்டிலை காதலித்து வந்துள்ளார். தற்போது இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் ஆகியோரை வாழ்த்தி உள்ளார். அதேசமயம் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.