spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் பட நடிகைக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

அஜித் பட நடிகைக்கு டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

-

- Advertisement -
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வரும் ரெஜினாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி செல்லும் வயதிலேயே சினிமாவில் தடம் பதித்து, அதன் கைபிடித்து வளர்ந்த முன்னணி நடிகை ரெஜினா கசாண்ட்ரா. ஒன்பது வயதிலேயே சினிமாவில் தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரெஜினா, பல படங்கலில் நாயகிகளுக்கு தங்கையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இளம் வயதிலேயே பல படங்களில் அவர் நடித்திருக்கிவார். இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரெஜினா. அதன் பிறகு பிரசன்னா மற்றும் லைலா இணைந்து நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார்.

we-r-hiring
இதையடுத்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதையடுத்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பிரபலமும் அடைந்தார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து, சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார். தற்போது அவர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 33 வயதாகும் ரெஜினா, தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.

MUST READ