நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியில் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக நடிகர் விஜய் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி அதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் கட்சியில் உறுப்பினராக சேரலாம் என்று தெரிவித்திருந்தார். சமீபத்தில் செயலியை அறிமுகப்படுத்தி முதலில் நடிகர்கள் விஜய் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து அதன் அடையாள அட்டையையும் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலரும் த.வெ.க வில் உறுப்பினராக சேர்ந்து தங்களின் அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டனர். அதன்படி சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
Congratulations💐 @actorvijay https://t.co/KIibeiL4Dm
— Shalini AjithKumar (@ShaliniAjithK) March 9, 2024
இந்நிலையில் பிரபல நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “வாழ்த்துக்கள் விஜய்” என்று நடிகர் விஜய் செயலியை அறிமுகப்படுத்திய வீடியோவை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


