90களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாவார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யா என்பவருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று காலை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மணமகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணமாகி பின்னர் சில காரணங்களால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஐஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தை கூறி திருமண ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டது. அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று காலை திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விஷால் உட்பட பல திரைப்பட பிரபலங்களும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன், திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்றவர். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 80 கோடிக்கு மேல்
வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.