புத்தாண்டு தினச் சிறப்பாக நடிகர் விஜயின் GOAT படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதேனும் வந்தால் நாங்களும் ஹேப்பியா இருப்போம் என்று ஏக்கத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். தயாரிப்பு நிறுவனமான லைகாவும் இது குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. மேலும் விடாமுயற்சி படத்தில் படக்குழுவினருக்குள் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் மிக மெதுவாகத்தான் நடைபெற்று வருகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நீரவ் ஷா விலகியது படப்பிடிப்பை மேலும் தொய்வடையச் செய்தது. இந்நிலையில் நடிகர் அஜித் பிப்ரவரி மாதம் வரை தான் இப்படத்திற்காக நாட்களை ஒதுக்கி உள்ளார் எனவும் மார்ச் மாதம் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்புகளை பொறுமையாக எடுத்து வரும் இயக்குனர் மகிழ்திருமேனியிடம் படத்தின் படப்பிடிப்புகளை வேகமாக முடித்து விடும்படி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கண்டிஷனாகக் கூறிவிட்டாராம் அஜித். பிப்ரவரி மாதத்திற்கு பின் எக்காரணம் கொண்டும் என்னால் நாட்களை ஒதுக்கித் தர முடியாது எனவும் கராராகக் கூறியுள்ளாராம் அஜித். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆகியும் கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இன்னும் இரண்டு மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்புகளை துரிதமாக முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி.
- Advertisement -