அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதற்கு முன்னதாக அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி அஜித்தின் 62வது படமான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே ஆஜர்பைஜானில் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த வாரம் பாங்காக்கில் இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக படக்குழு பாங்காக் செல்கிறது. மேலும் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் நடிகர் அஜித்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மிரட்டலான டீஸர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் 2025 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தின ஸ்பெஷலாக ட்ரைலர் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? அல்லது டீசரை படக்குழு வெளியிட்டதை போல் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸாக வெளியிடப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.