spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் மூளையில் அறுவை சிகிச்சை... ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி...

அஜித் மூளையில் அறுவை சிகிச்சை… ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி…

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் தலக்கும், தளபதிக்கும் என்றுமே தனி கிரேஸ் என்றே சொல்லலாம். தளபதி என விஜய் கொண்டாடப்பட்டால், தல எனும் கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமார். ஆரம்ப காலத்தில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த அஜித்குமார், தற்போது ஆண்டிற்கு ஒரு படத்தில் நடிப்பதே அரிதாகி உள்ளது. அண்மைக் காலமாக எச். வினோத்துடன் இணைந்து அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார். அஜித் நடிப்பில் வௌியான வலிமை, துணிவு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித், மஞ்சு வாரியார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே நடிகர் அஜித் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

we-r-hiring

 

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நேற்று அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனை என்று தான் கூறப்பட்டது. ஆனால், தற்போது, அஜித்தின் மூளையில் கட்டி இருந்ததாகவும், அதை அறுவைசிகிச்சை செய்து எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், அஜித் தற்போது நலமமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் இது வதந்தி என்றும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இச்செய்தி அறிந்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

MUST READ